What is Chitta Patta Adangal full details 2022

What is Chitta Patta Adangal full details 2022

பட்டா, சிட்டா, அடங்கல், என்றால் என்ன இவை ஏன் நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது..!

நிலம் தொடர்பான ஆவணங்களில் பட்டா, சிட்டா, அடங்கல், ஆகிய மூன்று ஆவணங்களையும் அடிக்கடி கேள்விப் பட்டிருப்போம்.

ஆனால் இந்த ஆவணங்கள் நிலையை பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் பல நபர்களுக்கு தெரியாமல் தான் இருக்கிறது.

எனவே இந்த பதிவில் பட்டா, சிட்டா, அடங்கல், என்றால் என்ன இது ஏன் நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

பட்டா என்றால் என்ன

பட்டா சான்றிதழ் என்பது நாம் வாங்கிய நிலம் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட அளவுகளில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு ஆவணச் சான்று.

நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது பட்டா இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற அனைத்து விவரங்களுடன் சர்வே எண்ணும், உட்பிரிவு, குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த நிலம் நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்ற விவரமும் நிலத்தின் பரப்பு, மற்றும் தீர்வை விவரங்களும், இதில் அடங்கியிருக்கும்.

உட்பிரிவு எப்படி பிரிக்கிறார்கள்

சர்வே எண் என்ற நிலத்தின் அளவு 2 ஏக்கர் என்று வைத்துக்கொள்ளலாம், அவர்களிடமிருந்து 30 சென்ட் நிலத்தை தாங்கள் வாங்குகிறீர்கள் என்றால் நிலத்தின் சர்வே எண் 1/A என்று குறிப்பிடப்படும் இவற்றில் A என்பது உட்பிரிவு ஆகும்.

What is Chitta Patta Adangal full details 2022

நிலத்தின் தன்மை

நிலத்தின் தன்மையை வைத்து அந்த நிலத்தை பல்வேறு வகையாக பிரிக்கப்படுகிறது, அதாவது நன்செய், புன்செய், நத்தம் மற்றும் புறம்போக்கு, என நிலத்தின் தன்மையை குறிக்கிறது அரசாங்கம்.

புல எண் மற்றும் சர்வே எண் என்றால் என்ன

ஒரு ஊரில் சுமார் 200 ஏக்கர் நிலத்தை தலா 50 நபர்கள் பிரித்து பொறுத்து 1 முதல் 100 எண்களை அடையாளம் வைத்துக்கொள்வதுதான் சர்வே எண்.

உதாரணத்திற்கு 2 எண்னை அடையாளமாக கொண்டவர்களின் நிலத்தின் சர்வே எண் 2 என அழைக்கப்படுகிறது.

சிட்டா என்றால் என்ன

சிட்டா என்பது பல பட்டாக்களின்  தொகுப்பு பதிவேடு ஆகும் அதாவது ஒரு நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கத்தின் தரவுகள் தான் சிட்டா.

சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம், அதாவது நன்செய், புன்செய், அல்லது புறம்போக்கு நிலம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

சுவையான ரவா குலோப்ஜாம் செய்வது எப்படி..!

நிலத்தின் முழு விவரமும் இதில் இருக்கும், நிலத்திற்கான தீர்வை கட்டிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

What is Chitta Patta Adangal full details 2022

அடங்கல் என்றால் என்ன

ஒரு கிராமத்தில் உள்ள மொத்த சர்வே எண்கள் அடங்கிய மொத்த பதிவேடுகள் தான் அடங்கல்.

what are the problems of mobile uses 2022

அடங்கலில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்ணுக்கு, உரிய நிலம் யாருடைய பெயரில் உள்ளது, நிலத்தின் தன்மை என்ன, பட்டா எண், போன்ற அனைத்து விவரங்களும் இதில் இருக்கும்.

Leave a Comment