What is Land Tenancy Act Best Tips 2023
நில குத்தகை சட்டம் என்றால் என்ன..!
பெரும்பாலான மக்களிடம் சொந்தமாக நிலம் இருக்காது ஆனால் அதனை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் அல்லது தொழில் செய்து வரலாம்.
கொஞ்ச காலமாக அதுவும் இல்லை ஏனென்றால் விவசாயம் செய்தால் நஷ்டம் ஏற்படுகிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விவசாயம் செய்வதை 60 சதவீதம் மக்கள் நிறுத்திவிட்டார்கள்.
இப்பொழுது விவசாயத்தில் நவீனத்தை புகுத்தி சொட்டுநீர் பாசனம், மூலம் செம் மரம் நடுதல், தேக்கு மரம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, டிராகன் பழம் வளர்ப்பு, கொய்யா போன்றவைதான் அதிகப்படியான லாபம் பார்க்க முடியும்.
நிலம் இல்லாதவர்கள் குத்தகைக்கு நிலத்தை எடுக்கிறார்கள் அது போன்ற நபர்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.
நிலம் கொடுத்த நபர் கொஞ்ச நாட்களில் என்னுடைய நிலத்தை திரும்பவும் என்னிடம் ஒப்படை என்று சொல்லி குத்தகைக்கு கொடுத்த பணத்தை மறைத்து நிலத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள்.
இதுபோல் நிறைய வகையான மோசடிகளை செய்து வருகிறார்கள், இதுபோல் செய்பவர்களை தடுக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
நில குத்தகை சட்டம் என்றால் என்ன
உங்களுடையதை மற்றவர்களுக்கு கொடுத்தாலும் சரி அல்லது உங்கள் நண்பர்களிடம் கொடுத்தாலும் சரி குத்தகை ஒப்பந்தம் செய்வது மிக அவசியம்.
யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக குத்தகை ஒப்பந்தம் செய்வது மிக அவசியம்.
தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் 1955 சட்டப்பிரிவு 4 பி (2) நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது முக்கியமான விதிமுறைகளை பின்பற்றுவது மிக அவசியம்.
What is Land Tenancy Act Best Tips 2023 அதாவது குத்தகை நிலத்தின் சர்வே எண், அளவு, குத்தகை காலம், குத்தகை தொகை, செலுத்தும் முறை, என நிலத்தின் பயன்பாடு மேலும் குத்தகை ஒப்பந்தம் காலம், என உரிமையாளர்களுடன் குத்தகைக்கு எடுக்கும் போது ஒப்பந்தத்தை நன்றாகவே செய்து கொள்ள வேண்டும்.
அந்த ஒப்பந்தத்தில் சுயமாக குத்தகை கொடுக்கும் நபர், குத்தகை பெறும் நபர் மற்றும் இரு சாட்சிகள் என நான்கு நபர்கள் கையெழுத்திட வேண்டும்.
What is Land Tenancy Act Best Tips 2023 இந்த ஒப்பந்தத்தை ஆளுக்கு ஒன்று நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம், 15 நாட்களுக்குள் உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவிட கொடுக்க வேண்டும்.
குத்தகை ஒப்பந்தத்தை முத்திரைத்தாளில் தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் இல்லை சாதாரணமாக வெள்ளை தாளில் எழுதலாம்.
ஒப்பந்தத்தில் உள்ளது போல் நடந்து கொள்ள வேண்டும்,இருவரில் யார் ஒப்பந்தத்தை மீறினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கு குத்தகை ஒப்பந்தம் அவசியம் இல்லை.