Whatsapp புதிய விதிகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மே 15க்கு பிறகு நடக்கப்போவது என்ன? (Whatsapp privacy policy changes in tamil 2021)
வாட்ஸப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது அதில் புதிய தனியுரிமைக் கொள்கையை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் வாட்ஸ்அப் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
இதனால் பலரும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கினார்கள் வாட்ஸ்அப் குரூப் பதிலாக இதனை அறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு செய்தியை வெளியிட்டது அதில் என்னவென்றால் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு கால கெடுவாக மே 15ஆம் தேதியே நிர்ணயித்தது.
ஒரு பயனாளர் விதிமுறைகளை புறக்கணித்தால் மே 15க்கு பிறகு என்ன நடக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் இப்பொழுது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன.
வருகின்ற மே மாதம் 15ஆம் தேதி வரை வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் எந்த ஒரு மாற்றங்களும் நிகழாது ஆனால் அதற்குப் பிறகுவாட்ஸ்அப் சேவைகளில் ஒவ்வொன்றாக நிராகரிக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் ஈமெயில் மூலம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக இழக்க மாட்டீர்கள்.
முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் புதிய தனியுரிமை கொள்கை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சேவைகள் முழுவதும் நிறுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் இப்பொழுது ஒரு பயனாளர் தனியுரிமைக் கொள்கையை நிராகரித்தால் வாட்ஸ்அப் இன் முழு செயல்பாட்டையும் அனுபவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
குறைந்த காலத்திற்கு மட்டுமே சேவைகள் நீட்டிக்கப்படும்.
குறைந்த காலத்திற்கு மட்டுமே வாட்ஸப்பில் அழைப்புகள் மற்றும் நோடிஃபிகேஷன்களை பெற முடியும் ஆனால் நீங்கள் மெசேஜ்களை படிக்கவும் மற்றும் திருப்பி அனுப்பவும் முடியாது.
நீங்கள் புதிய தனியுரிமை கொள்கை ஏற்றுக் கொண்டால் அனைத்து சேவைகளும் வாட்ஸப்பில் கிடைக்கும் இல்லையென்றால் உங்களுடைய சாட் வரலாற்றை பதிவிறக்கம் செய்து வேறு ஒரு செயலியில் பயன்படுத்தலாம்.
UAE First Picture of Mars in volcano 2021
தானாக நீக்கப்படும் உங்களுடைய கணக்குகள்.
வருகின்ற மே 15க்கு பிறகு உங்களுடைய வாட்ஸ் அப்பில் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் காலக்கெடு முடிந்தது 120 நாட்கள் ஆன பிறகு உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு தானாகவே நீக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது அதாவது செயலற்ற கணக்கு என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து விடும்.
உங்களது Google Account யை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலிட் செய்வது அதற்கான ஈஸியான டிப்ஸ்.
இதற்குப் பிறகு ஒரு பயனாளர் தங்களுடைய மொபைலில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தினால் அவர்களுடைய சாதனத்தில் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்று நோட்டிபிகேஷன் தெரிவிக்கவும் வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும்.