எங்கு சிறந்த வட்டி கிடைக்கும் தபால் துறையா அல்லது வங்கியா(which fixed deposit best in India 2021)
நமக்கெல்லாம் சிறுசேமிப்பு திட்டம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது அருகில் இருக்கும் அஞ்சலகம் தான். அதிலும் டைம் டெபாசிட் திட்டம் என்பது இன்னும் நல்ல திட்டமாகவே மக்களால் வரவேற்கப்படுகிறது இன்றளவும்.
இன்றைய காலகட்டங்களில் ஃபிக்ஸட் டெபாசிட் என்றாலே நினைவுக்கு வருவது வங்கியில் வைக்கக்கூடிய வைப்பு நிதி திட்டம் பற்றி தான். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்வது என்பது மிகவும் பாதுகாப்பானதாக பலதரப்பட்ட மக்கள் சொல்கிறார்கள்.
இன்று நாம் பார்க்க இருப்பது அஞ்சலக டெபாசிட் திட்டங்கள் மற்றும் வங்கி டெபாசிட் திட்டங்கள் தான் இவற்றில் எது சிறந்தது எது அதிகமான வட்டி கொடுக்கக்கூடியது, எங்கு முதலீடு செய்யலாம் பொருளாதார நிபுணர்களின் கணிப்பு என்ன என்று முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எங்கு சிறந்தது வங்கி அல்லது அஞ்சலகம்
ஃபிக்ஸட் டெபாசிட்டினைப் போலவே இதிலும் பணம் முடக்கப்படும் இதன் மூலம் சேமிப்பு பழக்கம் வளரும், இந்தியாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்திய அஞ்சல் துறை இரண்டுமே டெபாசிட் திட்டங்களை கொண்டுள்ளது.
இப்போதும் அதிக மக்கள் தங்கள் பணத்தை விரும்பி சேமிக்கக் கூடிய ஒரு இடமாக அஞ்சலகம் இருக்கிறது.
கால அளவுகள் மாறுபடும்
தபால் துறையிலும் முதலீட்டு திட்டங்கள் வங்கிகளை போலவே 5 ஆண்டுகள் வரைகால அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கு வட்டி விகிதமும் காலாண்டுக்கு ஒருமுறை மத்திய அரசால் மாற்றி அமைக்கப்படுகிறது.
எனினும் இங்கு வட்டி விகிதம் என்பது 1 வருடம் 2வருடம் 3 வருடம் 5 வருடம் என பிரித்து முதலீடு செய்யப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
எஸ்பிஐயில்(SBI) 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையில் கால அளவில் டெபாசிட் செய்து கொள்ளலாம் விருப்பம் போல.
என்னென்ன ஆவணங்கள் தேவை
இந்த இரண்டு இடங்களிலும் டெபாசிட் கணக்கை தொடங்க கேஒய்சி(KYC) தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தனிநபர் மற்றும் இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்கவேண்டும்.
அதுமட்டுமில்லாமல் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை போன்ற ஆவணங்களுடன் உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சமர்ப்பிக்கவேண்டும்.
கட்டாயம் வங்கி கணக்கு அவசியம்
நீங்கள் ஏற்கனவே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்தால் இணையதளம் மூலம், வங்கி சேவையின் மூலம், எளிதாக இந்த டைம் டெபாசிட் கணக்கினைத் தொடங்கும் முடியும் ஒரு நபருக்கு சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கு இருந்தால் இணையதளம் மூலம் இந்த டைம் டெபாசிட் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
யார் தொடங்க முடியும்
அஞ்சல் அலுவலகங்களில் குழந்தைகளின் பெயரில் கூட இந்த வைப்பு நிதி கணக்கை எளிதாக தொடங்கிக் கொள்ளலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் கணக்குகளை தாங்களாகவே பராமரித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
ஸ்டேட் பேங்க் வங்கியைப் பொறுத்தவரை இரண்டு வித தொடர் வைப்பு நிதி கணக்குகளை மக்களுக்கு வழங்குகிறது ஒன்று வழக்கமானது மற்றொன்று விடுமுறை கால சேமிப்பு கணக்குகள்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் வட்டி விகிதம் -2.9%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் வட்டி விகிதம் -3.9%
180-200 நாட்கள் வரையில் வட்டி விகிதம் – 4.4%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் விகிதம் – 4.4%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள்வட்டி விகிதம் -5.0%
2 வருடம் முதல் 3 வருடம் வரையில் விகிதம் -5.1%
3 வருடம் முதல் 5 வருடம் வரையில் விகிதம் -5.3%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் விகிதம் -5.4%
தபால் துறை வட்டி விகிதம்
1வருடம் -5.5%
2வருடம் -5.5%
3வருடம்-5.5%
5வருடம்-6.7%
Click here to view YouTube channel
இந்த இரண்டு கணக்குகளும் அதிகபட்ச முதலீடு என்பது நிர்ணயிக்கப்படவில்லை, அதனால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ செய்து கொள்ளலாம் ஒரு நபர்.
சேமிப்புக்கு ஏற்ற இடம் எது
Best 10 signs that your heart is unhealthy
வட்டி விகிதம் என்று பார்க்கும்பொழுது தபால் துறையில் அதிகம் எனலாம் அதுமட்டுமில்லாமல் தபால் துறையை அணுகுவது எளிதாக முடியும் உங்கள் அருகில் இருக்கும் தபால் துறையை அணுகி இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்துகொள்ளலாம்.