Which is the most delicious fish in tn 2022
மீன்களில் எந்த வகையான மீன் அதிக சுவை கொண்டது..!
கடல் மீன்களில் புரதச்சத்து, கோலின், அயோடின், போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது, இவையெல்லாம் இருக்கின்றது தெரியாமல் நாம் மீன்கள் மீது அதிக ஆசை வைக்கக்காரணம் அதன் சுவை மட்டுமே.
சரி இப்பொழுது மீன் சந்தைக்குப் போனால் எப்படி நல்ல மீன், கெட்ட மீன் என்பதை, தெரிந்து சரியான மீனை வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மீன் பார்க்கும்போது புதிதாக இருந்தால் நல்ல மீன்
மீனின் செவுளைத் திறந்து பார்த்தால் செந்நிறமாக இருக்கும் ஒருவேளை சாம்பல் நிறமாக மாறி இருந்தால் அது கெட்டுப் போன மீன்.
உங்களுக்கு பிடித்த மீன் இனமாக இருந்தால் அதை வாங்கியே தீரவேண்டும் என நீங்கள் நினைக்கும் போது, அதில் எங்கேயாவது அடிபட்டு இருந்தால் அந்த மீனை நீங்கள் தேர்ந்தெடுக்க கூடாது.
மீனின் கண்கள் மங்கலாக இல்லாமல் தெளிவாக நல்ல நிறத்துடன் இருக்க வேண்டும்.
பனிக்கட்டியில் அதிக நேரம் வைத்த மீன் கூடாது அதிக நேரம் வைத்திருந்தால் மீன் மேல் விரல் கோடு போட்டால் தெரிந்து விடும்
நீங்கள் வாங்கும் மீன் ஒருவேளை கெட்டுப் போயிருந்தால் அது உங்களுக்கு ஃபுட் பாய்சன் என்பதை ஏற்படுத்திவிடும்.
மீனின் உள்புறம் முட்கள் அதிகமாக இருக்கின்ற மீனும், செதில் அதிகமாக இருக்கின்ற மீனும், அதிக சுவை கொண்டதாக இருக்கும், ஆனால் இதை குழந்தைகள் சாப்பிட முடியாது, என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீனை கையில் எடுத்துப் பார்க்கும் போது நல்ல கனமாக இருக்க வேண்டும்.
மீனின் மேல் பகுதியில் தொட்டு பார்க்கும் பொழுது நொள,நொளனு, இருக்கக்கூடாது.
நீங்கள் வாங்குகின்ற மீன் ஆரோக்கியமாக இருந்தால் கட்டாயம் அதிக சுவை கொண்டதாக இருக்கும்.
ஆற்று மீனை விட கடல் மீன் அதிக சுவை கொண்டது.
தமிழ்நாட்டில் அதிக சுவை கொண்ட மீன்
தமிழ்நாட்டில் அயிரை மீன் அதிக சுவை கொண்ட மீனாக கருதப்படுகிறது, இந்த வகை மீன்களை எல்லாம் ஊர்களிலும் காண்பது அரிது.
காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெற சில எளிமையான குறிப்புகள்..!
கிராமங்களில் அங்குள்ள வாய்க்கால், கண்மாய், நீரோடை, போன்ற இடங்களில் மட்டுமே இந்த வகை மீன்களை காண முடியும்.
How to measure land full details 2022
இந்த மீன்களுக்கு தனி சீசன் உண்டு என்று சொல்லலாம் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நெல் அறுவடைக்கு முந்தைய இரண்டு மாதத்திற்கு மட்டுமே இந்த மீன் கிடைக்கும்.
இந்த மீன் குழம்பின் சுவை நாவில் நீர் சுரக்க வைப்பது மட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு வகையான நன்மைகளை அளிக்கும்.