கொரோனா வைரசுக்கு 6 புதிய பெயர்களை சூட்டிய உலக சுகாதார அமைப்பு(WHO Announced 6 new name to the coronavirus)
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு புதிய கிரேக்க எழுத்துக்களை பெயர்களாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம் ஒரு நாட்டில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரசுக்கு நாட்டின் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில் கிரேக்க எழுத்துக்கள் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பூமியில் காலநிலைக்கு ஏற்ப புதிய வைரஸ் பரவுவதால் உலக மக்கள் அதனை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள சுவாரசியமான பெயர்கள் வைக்கப்படுவது இயல்பு இதனை கொண்டு செய்திகளிலும் வைரஸின் பெயர் கொண்ட தகவல்கள் வருவதால் அது மக்களுக்கு எளிதாக புரிந்துவிடுகிறது. ஒரு வைரஸின் தன்மையைப் பொருத்தும் அதன் வளர்ச்சியை ஆராய்ந்த பின்னர் அதற்கு வல்லுநர்கள் பெயர் வைக்கிறார்கள் அது முதன்முதலில் தோன்றிய ஊர் அல்லது ஒரு அடையாளத்தைக் குறிக்கும் வகையில் பெயர் இருக்கும் இப்பொழுது அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது தற்போது உலகை அச்சுறுத்தி வரும் வைரஸுக்கு கொரோனா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .
கொரோனா என்ற சொல் லத்தீன் மொழிச் சொல்லாகும் இதற்கு அர்த்தம் மலர் மகுடம். சீனாவில் 2019 ஆம் ஆண்டில் பரவிய புதிய கொரோனா வைரஸ் ஏழாவது இனமாகும் இந்த வைரஸ் முந்தைய வைரஸ்களை விடவும் அபாயகரமானதாகும் அதி வேகமாக பரவும் திறன் உள்ளது இது தற்போது பல மாற்றங்களை அடைந்து அதிக வீரியத்துடன் உலகில் எல்லா நாடுகளிலும் பரவி வருகிறது அதற்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு டெல்டா (Delta ) என பெயர் சூட்டி உள்ளார்கள் மற்றொரு உருமாறிய வைரசுக்கு காப்பா (Kappa ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு (ALPHA) ஆல்பா என்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு பீட்டா ( Beta )என்றும் பிரேசிலில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரசுக்கு காம என பெயர் வைக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் கண்டறியப்பட்ட வைரசுக்கு எப்சிலான் (Epsilon ) என பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க.
கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு அழைக்கும் முறையை உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் உருமாற்றம் அடைந்த வைரஸ் அதன் வீரியத்தன்மை அதன் பரவும் தன்மை உள்ளிட்ட பல தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.