அபாய மணி அடிக்கிறது உலக சுகாதார நிறுவனம் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசியும் செயலிழக்கும் ஆபத்து ஏற்படலாம்.( WHO Announced is now India is so danger 2021)
அதிக வீரியம் உடைய உருமாறிய கொரோனா வைரஸ்ல் இந்தியாவின் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது இனி வரும் காலங்களில் இதனை கட்டுப்படுத்த அரசு தவறினால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகூட செயலாற்றுஆகிவிடும் அபாயம் உள்ளது, என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது தினந்தோறும் குறைந்தது 4 லட்சம் நபர்களுக்கு மேல் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுகிறது மேலும் உயிரிழப்பு 4,000 ஆக இருக்கிறது குறைந்தது.
கடந்த ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் வகையை விட இது பலமடங்கு ஆபத்தானது இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் பி.1.617 வகையை சேர்ந்தது இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி குழந்தைகள் நல மருத்துவருமான சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது இந்த உருமாறிய கொரோனா வைரஸ் விரைவாகவும் பரவும் தன்மை உடையது மேலும் நோயாளிகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளது இதற்கு இந்த வகை வைரஸ் மட்டுமே காரணம் சொல்ல முடியாது மக்கள் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை காற்றில் பறக்கவிட்டது தான் முதன்மையான காரணம்.
மதம் சார்ந்த விழாக்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது, முக கவசம் அணியாமல் இருந்தது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தாமல் இருந்தது, மொத்தத்தில் ஒரு சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் இந்திய மக்கள் இருந்தது மட்டுமே இதற்கு முக்கிய காரணம். மேலும் வைரஸின் வீரியம் தீவிரமாக இருப்பதால் பரவும் தன்மை என்பது அதிவேகத்தில் இருக்கிறது.
இந்த வகை வைரஸ் குறித்து அமெரிக்கா பிரிட்டன் சுகாதார துறையினர் மிகவும் கவலை தெரிவித்துள்ளார்கள் ஏனெனில் இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவி ஆரம்பித்தால் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
2% நபர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டு உள்ளார்கள்.

எந்த ஒரு நோய்க்கும் தடுப்பூசி தயாரிப்பதில் உலக அளவில் முன்னணியில் வகிக்கும் இந்தியாவில் 2 சதவீதம் பேர் தான் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்கள்.கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று நம்பிக்கை கொண்டு முக கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் கைவிட தொடங்கியது இந்த இரண்டு அலைக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இப்பொழுது மத்திய, மாநில, அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை போர்க்கால அடிப்படையில் துவங்கியுள்ளது.
இந்தியாவில் 70-80 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பல மாதங்கள் ஆகி விடும் எனவே தடுப்பூசி மட்டும் இதற்கு சரியான தீர்வாக இருக்காது மக்கள் மக்கள் சுகாதார கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சிறந்த மருத்துவ வசதிகள் இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு இருக்கும் ஒரே வழி.
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால் அது மேலும் உருமாற்றம் அடையக் கூடிய ஆபத்து உள்ளது அப்படி மட்டும் நிகழ்ந்தால் தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை கூட அது செயலற்றுத்தாகிவிடக் கூடிய அபாயம் உள்ளது அப்படி ஒன்று நிகழ்ந்தால் அது இந்த உலகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும்.
6 அடி சமூக இடைவெளி கூட ஆபத்தானது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது இருமல் மற்றும் தும்மலின் போது மட்டுமல்லாமல் நாம் பேசும்போது, உடற்பயிற்சி செய்யும்போது, மெலிதாக மூச்சு விடும், போது கூட நம் நாசியில் இருந்து மிக மெலிதான திரவங்கள் காற்றில் கலந்து மிதக்கும் அவை சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் வரை காற்றில் கலந்து இருக்கும்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள உணவு பரிந்துரைகள்.
கொரோனா நோயாளியின் மூச்சுக்காற்றில் இருந்து வெளியேறும் இந்த சிறு துகள்கள் நோய் பரப்பும் அபாயம் உள்ளவை எனவே நோயாளிகளிடம் இருந்து 3 முதல் 6 அடி தூரத்தில் நிற்பது கூட தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.