உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார அமைப்பு கோவிட் 19 அவசர விவரங்கள் அறிவிக்கப்பட்டன (WHO covid 19 emergency details announced)
ஆண்டுதோறும் டிசம்பர் 27ம் தேதி சர்வதேச நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானோம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது 2020ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் நிச்சியமாக கடைசி பெரும் தொற்றாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் 200 மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது இதனால் உலக முழுவதும் பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை கவனிக்க தவறினால் நிச்சயம் பெரும் அழிவு காத்துக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார் மேலும் பணத்தை வைத்து காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தலாம் என்ற குறுகிய பார்வை நம்மிடம் உள்ளது இது பயன்தராது மேலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்க்கு பின் தங்கியுள்ளது இது மிகவும் ஆபத்தானது இதற்க்கு சரியான தீர்வு வேண்டும் என தெரிவித்தார்.
2020ம் ஆண்டு மூலம் நாம் வரும் காலத்திற்க்கு சரியான பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் மனிதர்கள் விலங்குகள் வாழும் இந்த பூமியில் வைரஸ் தொற்று பெரிய ஆபத்துகளை சில நேரங்களில் ஏற்படுத்துக்கிறது.
2019ம் ஆண்டு நடத்திய ஆய்வில் உலகம் தயாராக இல்லை.
2019ம் ஆண்டு செம்டம்பர் மாதம் சர்வதேச ஆயத்த கண்காணிப்பு வாரியம் நடத்திய ஆய்வில் திடிரென்று பெரும் நோய் தொற்று ஏற்பட்டால் அதனை சமளிக்கு வகையில் உலக நாடுகள் இல்லை என்ற அறிக்கையே வெளியிட்டது.
கொரோனா வைரஸ் கண்டிப்பாக இந்த உலகில் இறுதி பெரும் தொற்றாக இருக்காது மேலும் இதனை வரும் காலங்களில் அனைத்தையும் மறந்துவிடுவோம்.
மீண்டும் பரவத் தொடங்கியது இதை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நாடுகளும் வலுவான சுகாதார உள்கட்டமைப்பை எற்படுத்த வேண்டும் மேலும் அதற்க்கு சரியான மூதலீடுகளை திரட்ட வேண்டும்.
கடந்த ஒரு வருடமாக அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த கொரோனா வைரஸ் மற்றும் காலநிலை மாற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் நாம் எடுக்கும் சுகாதார முயற்ச்சிக்கு சரியான பலன் கிடைக்காது.
இங்கிலந்தில் மீண்டும் பரவ தொடங்கியுள்ள புதிய கொரோன வைரஸ்ஸின் அரிகுறிகள் இவை தான்.!!!
வரும் காலங்களில் அனைத்து வகையான அவரசர நிலைகளை கண்டறியவும் தடுக்கவும் அதனைப் பற்றி தணிக்கவும் உலக நாடுகள் எப்பொழுதும் தயராக இருக்க வேண்டும்.twitter