எலும்பு அடர்த்தியை உறிஞ்சும் கார்போனேட் பானங்கள் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது(why Cold Drinks are not good for health 2021)
பாட்டிலில் அல்லது டின்னில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பன்னாட்டு கார்ப்பரேட் பானங்களை குடிப்பதால் பல்வேறு விளைவுகள் உடலில் ஏற்படுகிறது அது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலங்களில் குழந்தைகள், டீனேஜ் தலைமுறையினர், சில சமயங்களில் பெரியவர்கள் கூட பன்னாட்டு நிறுவனங்களால் கலர்கலராக சிறு பாட்டில்கள் அல்லது டின்களில் அடைக்கப்பட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டு விற்பனை செய்கின்ற பானங்களை குடித்து சந்தோஷமாக இருக்கிறார்கள், கேட்டால் தாகம் தணிக்கும் பானங்கள் என்று இதனைப்பற்றி சொல்கிறார்கள்.
இந்த கார்ப்னேட் பானங்களில் என்ன வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்றால் இதில் மேக்ரோநியூட்ரிஷியஸ் என்று சொல்லக் கூடிய கார்போஹைட்ரேட் அதாவது மாவு சத்தும்மில்லை நல்ல கொழுப்பும் இல்லை.
மைக்ரோநியூட்ரிஷன்ஸ் என்று சொல்லக்கூடிய இந்த வைட்டமின்கள் ஏ, சி, பி, கே, இதில் இல்லை, இந்தத் தனிமங்கள் எல்லாம் நமது உடலுக்கு அதிகம் தேவை, இவை எதுவும் இந்த கார்ப்பரேட் பானங்களில் இல்லை.
இதில் அதிகம் இருப்பதை கார்பன்-டை-ஆக்சைடு இதனை திறக்கும்போது நுரை ததும்பி வழியும் இதைப் பார்க்கும்போது சிலருக்கு அதிகம் குடிக்க வேண்டும் என்ற ஒரு உணர்வு ஏற்படும்.
பொதுவாக கார்பன்-டை-ஆக்சைடு என்பது நம் மூச்சில் ஆக்சிஜனை இழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம் ஆனால் இந்த பானங்களில் கார்பன்-டை-ஆக்ஸைடு தான் நாம் குடிக்கிறோம், இது நல்லதா என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக தற்போது இலக்கு வைப்பது குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், போன்றவர்களை தான். தற்போதைய ஆராய்ச்சிகளில் குழந்தைகள் தங்கள் சாப்பிட வேண்டிய சர்க்கரையில் 30% இந்த கார்ப்பரேட் பானங்களில் இருந்து பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள், இது ஒரு அதிர்ச்சிகரமான ஒரு செய்தியாகும்.
குழந்தைகள் பெரும்பாலும் நேரடியாக கடைக்கு சென்றால் குழந்தைகளை கவர்வதற்கு என்று இது நேரடியாக குழந்தைகள் கண்ணில் படுமாறு வைக்கிறார்கள், இதனை குழந்தைகளுக்கு பழக்குவது பெரியவர்கள் தான் அதனால தான் பெரியவர்கள் இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.
இந்தப் பன்னாட்டு குளிர்பானங்களில் சோடியம் பென்சோயேட் என்னும் ரசாயனம் உள்ளது. இது குழந்தைகளின் மெண்டல் மோட்டாட் திறன் குறைகிறது. யோசிக்காமல் பேசுதல். அல்லது செயல்படுதல். ஆனால் சிக்கலான நரம்பியல் வளர்ச்சி தொடர்பான குறைபாட்டை இது உண்டாக்குகிறது.
இதனால் உடல் பருமன் என்பது நம்பமுடியாத அளவில் சில நேரங்களில் சில குழந்தைகளுக்கு அதிகமாகிறது, இதனை நீங்கள் வெளியில் சென்றபோது கவனித்திருப்பீர்கள்.
குழந்தைகளுக்கு தூங்கும் நேரம் இதில் மாறுபடும், தூக்கமும் இதில் மாறுபடும் குழந்தைகள் பதின்ம வயதினர் குறிப்பாக இதில் பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும் இது ஒரு அபாயகரமாக இருக்கிறது கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் கார்போனேட் பானங்கள் குடிக்கும் போது, குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கிறது, இதனால் குழந்தையின் எடை வீதம் அதிகரிக்கிறது.
மருத்துவ வல்லுநர்கள் 2006ஆம் ஆண்டு சுமார் 2500 பெண்களை கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதால், பாஸ்பரஸ், கால்சியம், சிறுநீரகத்தில் இருந்து வெளியேறுகிறது. இது எலும்பு அடர்த்தியை குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் பக்கவாதம், அல்சைமர், டிமென்ஷியா போன்ற மூளை சம்பந்தமான குறைபாடுகள் 7 மடங்கு வருவதற்கான அபாயத்தை குளிர்பானங்கள் உருவாக்குகிறது.
ஆனால் இது எப்படி ஆண்டுதோறும் அதிகமாக விற்பனையாகிறது என்று பார்த்தால், இதனை குடிக்கும் போது மகிழ்ச்சியை ஆர்ப்பரிப்பு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
இன்னும் இன்னும் அதிகமாக குடிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுகிறது, அதிக இனிப்பு கொண்டுள்ளதால் மீண்டும் இதனை தொடங்குகிறோம், இனிப்பு சாப்பிட தூண்டுகிறது. நல்ல விஷயங்களில் தூண்டுதல் எதுவும் இல்லை.
குளிர்பானங்கள் தயாரிக்கும் பொழுது இதுகுறித்து அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பன்னாட்டு நிறுவனங்கள் சொல்கிறது.
எனினும் நாள்பட நாள்பட இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, உடலில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இன்று குளிர்பானங்களை தொடர்ந்து அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது, அது உடலில் DHA மாற்றத்தை உருவாக்கும் அளவிற்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது, இந்த பாதிப்புகளை அளிக்கக்கூடிய பானங்கள் உங்களுக்கு தேவையா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு இதுபோல் கார்ப்பரேட் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றும் போது இயற்கையாகவே இருக்கின்ற மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, வெள்ளரிக்காய், இளநீர், பேரீச்சம்பழம், போன்றவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இவை உடலுக்கு தேவையான அளவு இயற்கையான சர்க்கரையை கொடுக்கிறது, இதனால் எந்த ஒரு நீரிழிவு நோயும் ஏற்படுவதில்லை.
ஒருவேளை நீங்கள் இது போல் குளிர்பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடிய நபராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்கள் அதிகமாக குளிர்பானங்களை சாப்பிடும் நபராக இருந்தால் முயன்றவரை தடுத்து விடுங்கள்.
Click here to view our YouTube channel
இன்று உலகில் அதிக அளவில் மக்களை கொன்று குவிக்க கூடிய நோய்களில் 3ம் இடத்தில் இருப்பது சிறுநீரக பாதிப்பு. இந்த பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது உண்மை என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
Nipah virus symptoms treatment new update 2021
சிறுநீரக பாதிப்பு என்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாது குறைந்தது 35,000 முதல் 45,000 வரை கட்டாயம் ஒரு மாதத்திற்கு இந்த நோய்க்கு நீங்கள் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.