Wife who went to the AIADMK meeting is missing
புளியோதரை பஞ்சாயத்து முடியவில்லை அதிமுக மாநாட்டிற்கு 50 சவரனுடன் போன மனைவி காணவில்லை கணவன் கதறல்..!
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மிகப்பெரிய பிரம்மாண்டமான அதிமுக மாநாடு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து இந்த மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் கலந்து கொண்டார்கள்,மதுரை அதிமுக மாநாட்டுக்கு சென்ற மனைவி இன்னும் வீடு திரும்பவில்லை.
என திருநெல்வேலி காவல் நிலையத்தில் ராமநாதபுரம் ஜேசுபாதகம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் மதுரையில் முதன்முறையாக பிரம்மாண்ட மாநாடு.
ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்தப்பட்டது,அதிமுக மதுரை மாநாடு மூலம் அக்கட்சியின் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி தான் அவருக்கு பின்னால் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளார்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தற்போது முழு பலத்துடன் இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் மதுரை மாநாடு அமைந்துள்ளது என்கிறார்கள்.
அதே நேரத்தில் மதுரை மாநாட்டில் டன் கணக்கில் உணவுகள் வீணாகப்பட்டது,உள்ளிட்ட சர்ச்சைகளும் இருக்கிறது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ராதாபுரம் அருகே கண்ணன் குளத்தை சேர்ந்த ஜேசுபாதம் என்பவர் கொடுத்த புகார் தமிழக முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் கொடுத்த புகாரில் என் மனைவி தங்க செல்வம் அதிமுக மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்,அவருக்கு 200 சவரன் நகை வாங்கி கொடுத்துள்ளேன் 18 வயதில் மகளும் 17 வயதில் மகனும் இருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று மதுரை மாநாட்டுக்கு செல்வதாக தெரிவித்து விட்டு வீட்டை விட்டு சென்ற மனைவி இப்போது வரை வீடு திரும்பவில்லை.
அதிமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மீது சந்தேகம் இருக்கிறது, அவர் தான் என் மனைவியை லாட்ஜில் அடைத்து வைத்திருப்பதாக சந்தேகிக்கிறேன்.
என் மனைவி மதுரை மாநாட்டுக்கு செல்லும்போது 50 சவரன் நகையும் அணிந்திருந்தார்,அவரை பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக மாநாடு குறித்த சர்ச்சைகள் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது குறிப்பாக உணவு அதிக அளவில் வீணாக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி புகார் மேல் புகார் வைக்கிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 scheme 63 lakhs applicants rejected