Woman duped crores of rupees through video call
தற்போது நம் நாட்டில் இணையதளம் மூலம் நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இளம் தலைமுறையினர் முதல் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் நபர்கள், அரசு ஊழியர்கள் வரை, அனைத்து தரப்பினரும் இந்த இணையதளம் மோசடிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
முன்பெல்லாம் விவரம் தெரியாதவர்கள் தான் டெபிட் கார்டு 16 நம்பர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்கள்.
ஆனால் இப்போது வேலை வாய்ப்பு, முதலீடு, பார்ட் டைம் ஜாப், பெண்பார்ப்பது, என பல வகையில் இணையதளம் மூலம் மோசடிகள் நடைபெறுகிறது.
பெங்களூர் மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இணையதளம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக இருந்த நிலையில் அந்த பெண் சுமார் 1.14 கோடி ரூபாயை ஏமாற்றி பறித்துள்ளார்.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலானவர்கள் இணையதளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடுகிறார்கள்.
இப்படி இருக்கையில் பெங்களூர் ஆர் கே புரத்தை சேர்ந்த 41 நபர் இங்கிலாந்தில் பணியாற்றி வந்தார்.
நிறுவனத்தில் முக்கிய தொழில்நுட்பத்தில் பயிற்சி எடுக்க பெங்களூர் வந்துள்ளார்.
இந்திய வந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட அவர் தனது சுய விவரத்தை மேட்ரிமோனி என்கின்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த மேட்ரிமோனி இணையதளத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆசையுடன் ஒரு பெண்ணுடன் பேசதுவங்கியுள்ளார் நட்பாக.
இந்தப் பெண்ணும் தன்னுடைய நட்பை தொடர்ந்து தொலைபேசி எண்களை பரிமாறி பின்னர் இருவரும் பேசிக் கொண்டதில்.
அந்தப் பெண் தனது தந்தை உயிரிழந்து விட்டதாகவும் தனது தாயுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் இணையதளத்தில் கொடுத்த தனது சுய விவரங்கள் அனைத்தும் போலி என அந்த 41 வயது மென்பொருள் ஊழியர்களுக்கு தெரியாது.
போன் மூலம் நட்பாக பேசிக்கொண்டு இருந்தபோது ஜூலை 2ம் தேதி மென்பொருள் ஊழியருக்கு அந்த பெண் போன் செய்து தனது தாயாருக்கு மருத்துவ அவசர சிகிச்சைக்காக ரூபாய் 1,500/- கேட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களில் அதாவது ஜூலை 4ம் தேதி அதிகாலை 12 மணிக்கு வீடியோ கால் மூலம் அந்த பெண் தனது ஆடைகளை கழற்றிக் கொண்டார்.
இதை எதிர்பாராத மென்பொருள் ஊழியருக்கு காத்திருந்தது அதிர்ச்சி இந்த வீடியோ கால் அந்த பெண் ரெக்கார்டு செய்துள்ளார்.
பின்னர் இந்த வீடியோவை வைத்து மென்பொருள் ஊழியரை மிரட்டி 1.14 கோடி ரூபாய் பணத்தை 2 வங்கிகளில் இருக்கும் 4 வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யும்படி மிரட்டி உள்ளார்.
இதில் பயந்த மென்பொருள் ஊழியர் பயத்தில் பணத்தை ட்ரான்ஸ்பார்ம் செய்துள்ளார்,இதன் பின்னரும் அந்தப் பெண் தொடர்ந்து பிளாக் மெயில் செய்து வந்த நிலையில்.
மென்பொருள் ஊழியர் அந்த பெண்ணின் உண்மையான பெயரை பல வழிகளில் கண்டுபிடித்துவிட்டார்.
இதை தொடர்ந்து மென்பொருள் ஊழியர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில் ஐடி பிரிவுக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை வேதப்படுத்திய நிலையில்.
நான்கு வங்கி கணக்குகள் முடக்கிய நிலையில் 84 லட்ச ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக உயர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார், மீதமுள்ள 30 லட்சம் ரூபாய் பணத்தை.
அந்த பெண் பயன்படுத்தி விட்டார் மேலும் அந்தப் பெண்ணை கைது செய்யும் பணிகளுக்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to reduce cholesterol level naturally
jio laptop specifications price launching date
Lava Yuva 2 smartphone specifications