worst 5 foods affect your brain in tamil
Worst 5 foods affect your brain in tamil
மூளையின் செயல்திறனை பாதிக்கும் ஆபத்தான உணவு வகைகள் என்ன..!
சில உணவுப் பொருட்களை அடிக்கடி அல்லது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவை மூளையின் செயல்திறனை பாதிக்கும்.
அதுமட்டுமில்லாமல் ஞாபக மறதியை ஏற்படுத்தும் மற்றும் சரியான சிந்தனை செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
அல்சைமர் டிமென்ஷியா போன்ற நோய்கள் ஆபத்தையும் அதிகரிக்கும்.
இன்றைய காலகட்டங்களில் 70 சதவீதம் நோய்கள் வருவதற்கு உணவுகள் மட்டுமே காரணமாக இருக்கிறது.
இயற்கை முறையில் கிடைக்கும் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை, சரியான நேரத்திற்கு சாப்பிட்டு வந்தால் மட்டும் போதும், எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஒருநாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் உறங்கினால் நீங்கள் ஆரோக்கியமாகவும், அதிக நாட்கள் உயிர் வாழ முடியும்.
அதிக நைட்ரேட் உணவுகள்
அதிக நைட்ரேட் உள்ள உணவு மன நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்துகிறது, உணவிற்கு நிறத்தை கொடுக்க இது பயன்படுத்தப்படுகிறது, சலாமி, சாசேஜ் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம் அதிக அளவில்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
அதிக சூட்டில் தொடர்ந்து பயன்படுத்திய எண்ணெயில் பொரித்த உணவை உண்பது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் இது உங்கள் அறிவாற்றல் ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கும்.
ஒரு ஆய்வின்படி பொரித்த பொருட்களை அதிகமாக சாப்பிடுபவர்களின் நினைவாற்றல் பலவீனமடைகிறது என தெரியவந்துள்ளது.
இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதால் ரத்தநாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது, எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சர்க்கரை பொருட்கள்
உடல் சர்க்கரை பொருட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது இது ஆற்றலை அளிக்கிறது, ஆனால் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது அது மூளையின் செயல்பாடு நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கும்.
செயற்கை சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது உங்கள் மூளை ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.
மது அருந்துவது
worst 5 foods affect your brain மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் செய்த ஆராய்ச்சி ஒன்றில் மது அருந்துபவர்களுக்கு டிமென்சியா ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள்
worst 5 foods affect your brain அதிக கிளைசீமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது பாஸ்தா மற்றும் ரொட்டி போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் களின் வகைகள் வருகிறது.
இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் இவை எடை அதிகரிப்பு வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.