zycov d vaccine full details in tamil 2021
12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் வந்துவிட்டது கொரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது (zycov d vaccine full details in tamil 2021)
கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் ஓரளவுக்கு குறைய தொடங்கியுள்ளது இருப்பினும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்தே தீரும் என்று தெரிவித்துள்ளதால் மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளார்கள்.
குறிப்பாக மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று பரவலான கருத்து நிலவி வரும் நிலையில் அவர்களுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பெற்றோர்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
இப்பொழுது இந்தியாவில் குழந்தைகளுக்கு புதிய தடுப்பு மருந்து ZyCoV-19 ஒன்று உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. இந்திய மருத்துவ கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 12 வயதிற்குள் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் இன்னும் தங்களது குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய சூழலில் தான் உள்ளார்கள். இந்த தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
3 டேஸ் தடுப்பூசியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ZyCoV என்பது 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும். இப்பொழுது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இது அரசின் உயிரித் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ஊசி இல்லாத உட்செலுத்தி பயன்படுத்தி இதை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி என அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாக்கு எதிராக உலகின் முதன் முதலில் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசி இது. தடுப்பூசி உட்செலுத்தப்படும் போது வைரஸின் புரதத்தை உருவாக்குக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக வெளிப்படுத்துகிறது.
தடுப்பூசி நோயிலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது பிளாஸ்மிட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட பிளாக் அண்ட் ப்ளே தொழில்நுட்பம் வைரஸ் பிறழ்வுகளை சமாளிக்க எளிதாக மாற்றி அமைக்ககூடியது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இது ஆறாவது தடுப்பூசி
இந்தியாவில் ஏற்கனவே 5 தடுப்பூசிகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இப்பொழுது இந்த தடுப்பூசி உடன் சேர்த்து 6 தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது.
What are the symptoms of colorectal cancer
மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை.
தடுப்பூசி சோதனைகளின் கட்டம் 1,2 மற்றும் 3 நிறைவு செய்துள்ளது சுமார் 28,000 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.அவர்களில் ஆயிரம் பேர் 12 -18 வயதுக்குட்பட்ட குழந்தைகள். மருத்துவ பரிசோதனையின் முடிவு 60% செயல்திறனை காட்டியுள்ளது.
8 Amazing Benefits of Eating Tuna fish
சோதனை தரவுகளின்படி தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு 67 சதவீத மக்கள் கொரோனா பாஸிட்டிவ் அடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. 2 டேஸ் கடுமையான அறி குறிகளை தடுக்கும் அதே வேளையில் 3 டேஸ் அளவுகள் மிதமான அறிகுறிகளை கூட குணப்படுத்துகிறது என சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.